அதிரை டூ செங்கோட்டைக்கு நேரடி ரயில் சேவை – குற்றாலம் – கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதம் –

1826 0


தென்னை ரயில்வே புதிய கால அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் வேளாங்கண்ணி – காரைக்குடி – செங்கோட்டை வழியாக எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

கால அட்டவனையில் குறிப்பிட்டுள்ளபடி வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6:30 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலானது திருத்துறைப்பூண்டி திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக அதிராம்பட்டினத்திற்கு இரவு 09:38 வந்து சேருகிறது இரண்டு நிமிடங்கள் மட்டுமே அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நிற்கும் இந்த ரயில் பட்டுக்கோட்டை அறந்தாங்கி,காரைக்குடி,செங்கோட்டைக்கு அதிகாலை 4: 15 மணிக்கு செல்கிறது.
அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் சரியாக 12:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு நல்லிரவு 2:39மணிக்கு வந்து சேருகிறது.

குறிப்பாக குற்றாலம் – கேரளா போன்ற நகரங்களுக்கு சுற்றுலா பயணம் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: