இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இன்றியமையாத கடமையான நோன்பை 30 நாட்கள் கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் கடமை.
ரமலான் பிறை 1 முதல் 30 வரை சுமார் 15மணி நேரம் உண்ணாமல் பருகாமல் இருந்து நோன்பை கடைபிடிப்பர்.
.
இதற்கென ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் இலவச அரிசிகளை வழங்கப்படும்.
அந்த வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக அரசு சார்பில் நோன்பு கஞ்சிக்கு என 6ஆயிரம் மெட்ரிக் டன் இலவச அரிசி வழங்க உத்தரவிட்டார்.
விண்ணப்பித்த அனைத்து பள்ளிகளுக்கு வட்ட வழங்கல் அதிகாரிகள் மூலமாக அரிசிகளை விரைவாக வழங்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Your reaction