அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 96 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி தகவல்கள்

391 0


அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 96-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 நிகழ்ச்சி நிரல்:-

கிராஅத்                 : சகோ. அகமது ஜம்ஷீத் ( இணை பொருளாளர் ) 

முன்னிலை           : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை            : சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )

சிறப்புரை              :  சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )

அறிக்கை வாசித்தல்  :  சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )

நன்றியுரை           : சகோ. நெய்னா  முகமது ( ஒருங்கிணைப்பாளர் )

தீர்மானங்கள்:

 1) வரக்கூடிய ரமலான் மாதத்தில் வழமை போல் ஒரு கிட் ரூ 1200 விலை மதிப்புள்ள பொருள்கள் வழங்க இருப்பதால் மார்ச் 1 முதல் வாட்ஸஅப் குரூப் மூலம் பெயர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுகொள்ளபட்டது.

 2) வட்டி இல்லாத நகை கடன் விஷயமாக ஆலோசிக்கப்பட்டு திரும்பி பெறுவது சிரமம்பற்றி விவாதிக்கப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டது

a ) அதிகமான கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது.

b ) ஆறு மாதத்திற்கு மேல் தீவிரமாக பின் தொடர்ந்து மும்முரமாக கவனிக்க வேண்டியது.

c ) பைத்துல்மால் முஹல்லா பொறுப்புதாரிகள் மூலம்  தீவிரமாக கண்காணித்து பெற்று தருவதற்கு ஒத்துழைக்க ஏற்பாடு செய்ய வேண்டி ஆலோசிக்கப்பட்டது .

d ) கடன் சிபாரிசு செய்யும்முன் நிர்வாக பொறுப்புதாரிகள் பத்திரத்துடன் முழுமையாக எழுத்து மூலம் ஒப்புதல் பெறுதல்.

மேலும் திறம்பட ஆய்வு செய்து கடன் வழங்க வலியுறுத்தப்பட்டது.

3) வருட சந்தா, ஜகாத், பித்ரா இந்த ரமலானில் கொடுத்து உதவ வலியுறுத்தப்பட்டது.

4) மறைத்த சகோ ஆபிதீன் அவர்களுடைய மறுமை வெற்றிக்கு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

5) இந்த வருட ஜகாத் தொகையை அதிகரிக்க ABM தலைமையகம் தமிழ் ஆங்கிலம் அரபி மூலம் கடிதம் தயாரித்து  அனுப்பவேண்டி கேட்டுக்கொள்ளப்பட்டது.

6) இந்த மாதம் தலைமையகம் நடத்தும் மாதாந்திர கூட்டத்தில் ZOOM  மீட்டிங் மூலம் வரும் 25-ம் தேதி ரியாத் சகோதர்கள் கலந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள கேட்டுக் கொள்ளபட்டது.

7) இன்ஷா அல்லாஹ் அடுத்த 97-வது அமர்வு MARCH மாதம் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: