உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் ஸ்தம்பித்து கிடக்கிறது இயல்பு வாழ்க்கை.
இந்த நிலையில் அதிரையில் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலக்கத்தை அடைந்து இருப்பதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து நகராட்சி ஆணையர் கருத்து தெரிவிக்கையில், அதிரை நகர மக்கள் பொறுப்பற்ற முறையில் முககவசம், சமூக இடைவெளி இன்றி சுற்றி திரிவதை காண முடிகிறது.
இதனால் தமக்கு வாராது என்று நினைத்து வீட்டில் உள்ள முதியவர்கள், சிறார்களுக்கு இந்நோயை பரப்பி வருகிறார்கள்.
இதனால் உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஏற்பட்ட பின்னர் விழித்து கொள்கிறார்கள் என்றார்.
வருமுன் காப்பதே சாலச்சிறந்தது என்றும் அரசு விதுத்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து நம்மையும் நமது நகர மக்களையும் காக்க வேண்டும் என்றார்.
மேலும் கட்டுப்படாத நபர்கள் மீது கொரோனா கால விதிமுறைகளை மீறிய சட்டத்தில் கடுமையாக தண்டனை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
Your reaction