தஞ்சாவூர் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!

479 0


தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, தகுதியுடைய பயனாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இஆப அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அதுவலகத்தில் பதிவு செய்து 30.09.2021 அன்றைய தேதியில் ஐந்து வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் பகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு(+2), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின் பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40
வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பொதுப்பிரிவினர்:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை(SSLC-Failed) – ரூ. 200

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்(SSLC-Passed) – ரூ. 300
மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோர்(HSC-Passed) – ரூ. 400
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) – ரூ. 600

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்:

எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் – ரூ. 600
மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோர்(HSC-Passed) – ரூ. 750
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றோர்(DEGREE-Passed) – ரூ. 1000

ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல்
பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்டப்படிப்புகள் மற்றும்
முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி மாற்றுச்சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து, விண்ணப்பப்படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்று பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் அலிவர் இ.ஆ.ப கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திவெளியீடு : செய்தி – மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: