அதிரையில் புதியதோர் புரட்சி! கணவர்களை இழந்த பெண்கள் இணைந்து நடத்தும் உணவு விற்பனை!

2504 0


கடந்த 5 வருடங்களாக Savings For Needy என்ற குழுமம் அதிரையில் இயங்கி வருகிறது. அவசர மருத்துவ உதவி, தொழில் தொடக்கம், முதியோர் மற்றும் இயலாதோர்கான உணவு வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு இந்த அமைப்பு முன்னுரிமை வழங்குகிறது.

இந்த தொண்டு நிறுவனத்தின் அடுத்த கட்ட  திட்டமாக கணவணை இழந்த பெண்கள் அல்லது கணவனின்  துணை இன்றி வாழும் பெண்களை கொண்டு தேவைப்படுவோருக்கு வீட்டு சாப்பாடு தயார் செய்து கொடுக்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தயிர்சாதம், எலுமிச்சை சாதம், குஸ்கா உள்ளிட்ட மதிய உணவு டெலிவரி செய்யப்படுகிறது.

ஆர்டரின் பெயரில் மற்ற உணவு வகைகளும் செய்து தரப்படும். வீட்டு சமையல் என்பதால் கடை எதுவும் கிடையாது. இங்கே குறிப்பிட்ட தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு ஆர்டர் செய்துக்கொள்ளவும். பிறருக்கும் இந்த சேவையை தெரியப்படுத்தி உதவிடுங்கள்.

தொடர்புக்கு:  8870860323, 8148510885

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: