கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!

743 0


இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட 2021 ஆண்டு இரண்டாம் அலை கொரோணா வியூகம் எடுத்துள்ளது.

கடந்த 10 நாட்களில் இந்தியா 36,110 COVID-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

வியாழக்கிழமையான நேற்று, நாடு மற்றொரு கொரோனா உச்சம் எட்டியது. 4.14 லட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் மற்றும் 3,927 இறப்புகள் பதிவாகின. கடந்த 10 நாட்களாக இந்தியாவில் தினமும் 3,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் பெரும்பாலான மருத்துவமனையில் படுக்கை அறைகள் தீர்ந்துவிட்டது. கொரோணா கேஸ்கள் அதிகரிப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற இடமில்லாதது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் ஒரு போரை நடைபெற்று வருகிறது. கொரோனாக்கு நாம் பலகிக்கொண்டாலும் இக்கால சூழ்நிலையில் பல்வேறு கட்டுப்படுங்கள் அரசு விதித்தாலும் அதைவிட பலமடங்கு நமக்கு நாமே கட்டுப்படுங்கள் விதிக்க வேண்டும். முகாம் கவசம் அணிய சொல்லி செல்போன் கால் முதல் வீட்டு டிவி வரை எல்லா இடத்திலும் கூறுவது முககவசம் அணியுங்கள் என்று தான்…

அதை கேட்டு கேட்டு அறுத்துபோனாலும் முககவசம் அணிவது தான் தன் உயிர்க்கு காப்பாற்றும் கருவியாக திகழ்கிறது. ஆனாலும் நாம் போடுவதில்லை நீ என்ன சொல்ல நான் ஏன் கேட்டுக இப்போ நேரம் இல்லை…

மருத்துவமனை இருக்கு… மருத்துவர்கள் இருக்கர்கள்… ஆனால் சிகிச்சைக்கு இடமில்லை.

ஒரு உயிர் பிரியும் போது தான் புரியும் உயிரின் அருமை.. பிரிந்த பிறகு வருத்தப்படுவதைவிட சிந்தித்து முன்னே செயல்படுவது புத்திசாலித்தனம்.

கொரோனாவின் தாக்கத்தை அன்றாட தொலைகாட்சிகளில் நாம் காண்கிறோம். அந்த நிமிடம் மட்டும் தான் உணர்வு இருக்கிறது. பிறகு வெளியே செல்லும்போது முககவசம் அணியாமலும் எந்த ஒரு கட்டுப்பாடுகளை பின்பற்றாமலும் செல்கிறோம். இது தான் அன்றாட வாழ்க்கையில் நடந்து வருகிறது. ஒரு சிலர் தனது உயிர் முக்கியம் அதுமட்டுமின்றி வீட்டில் இருக்க கூடிய குழந்தைகள் , பெரியோர்கள் உள்ளார்கள் அவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் நாம் முககவசம் இல்லாமல் வெளிய சென்றுவிட்டுவருவதால் தொற்று பரவிவிடுமோ என்ற பயத்தில் சிலர் முககவசம் அணிகிறார்கள்.

கொரோனவால் பாதிக்கப்பட்டவர் அதிகமான பெரியோர்கள் , குழந்தைகள் உள்ளன. தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிக்குப் படுக்கை கிடைக்க வேண்டுமென்றால் ஏற்கனவே படுக்கையில் இருக்கும் நோயாளி படுக்கையைவிட்டு அகன்றால் மட்டுமே புதிய நோயாளிக்குப் படுக்கை கிடைக்கும். இதுதான் இன்று தனியார், அரசு மருத்துவமனைகளின் நிலைமை.

ஆதலால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அதனை எதிர்கொள்ள முகக்கவசம் என்னும் ஆயுதத்தை கையிலெடுங்கள்.

இச்செய்தியை வெறும் செய்தியாக பார்க்காமல் ஒரு உணர்வோடு , சிந்தித்து அரசு சொன்ன அறிவிப்புகளை ஏற்று பின்பற்றுங்கள்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: