தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கட்டுமான பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் அப்பகுதி ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஓர் அறைக்குள் அத்துமீறி புகுந்த மர்மநபர்கள், தங்களை காவல் துறையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு அங்கு தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வடமாநில தொழிலாளர்களிடமிருந்து பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதனிடையே தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை காவல்துறை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தங்கள் மாநில அரசின் உதவியை கோர பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த சம்பவம் இரு மாநில அரசுகளுக்கும் தலைவலியாக உருவெடுக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Your reaction