Saturday, April 27, 2024

அதிரையில் கொரோனாவை பரப்பும் போலி நிருபர்கள் !

Share post:

Date:

- Advertisement -

தொட்டாலே தொற்றிக்கொள்ளும் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை வீழ்த்த அதிரையே அடங்கி கிடக்கும் நிலையில், சில ரோடுசைடு ரோமியோக்கள் சாலைகளில் அவசியமின்றி வலம்வருகின்றனர். அவ்வாறு சுற்றித்திரியோரை பிடித்து காவல்துறையினர் விசாரிக்கும்போது, தங்களை நிருபர்கள் என அறிமுகப்படுத்துக்கொண்டு அங்கிருந்து வேறொரு இடத்திற்கு உலாவ சென்றுவிடுகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறையினர், விழிபிதுங்கியுள்ளனர்.

இந்நிலையில் தங்களை நிருபர்கள் என சொல்லிக்கொள்ளும் நபர்களிடம் முறையான அடையாள அட்டை உள்ளதா என்பதை சரி பார்ப்பதுடன் சம்மந்தப்பட்ட ஊடகத்தின் அதிகாரப்பூர்வ எண்ணை தொடர்புக்கொண்டு அந்த நபரின் விவரங்களை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையினரை ஊடகவியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு முறையான ஆவணங்கள் இல்லாத போலி நிருபர்களை கண்டறிந்து தொற்று நோயை பரப்ப முயன்ற குற்றத்திற்காகவும் மோசடி செய்ததற்காகவும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு: அரசின் பதிவு பெற்ற அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நிருபர்களுக்கு முறையான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....