அதிரை கால்பந்து தொடர்களின் நிலவரங்கள்!!

1148 0


அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் அதிரை AFFA – 5Sky Sporting காயல்பட்டினம் அணிகள் மோதின.

இதில் காயல்பட்டினம் அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் அதிரை AFFA அணியை வீழ்த்தி இறுதிப் போட்டடியில் நுழைந்தது.

அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் 24 நாட்களாக SSMG நினைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் 19 ம் ஆண்டு கால்பந்து தொடரில் இன்று கலைவாணர் 7’s கண்டனூர் – தஞ்சாவூர் அணிகள் முதல் காலிறுதி போட்டியில் களம் கண்டனர்.

இதில் கண்டனூர் அணி 5 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நாளைய தினம் AFFA தொடர் இரண்டாவது அரையிறுதில் CCK காரைக்கால் – கலைவாணர் 7’s கண்டனூர் அணிகளும், அதிரை SSMG தொடர் காலிறுதியில் கௌதியா 7’s நாகூர் – அதிரை SSMG அணிகள் மோத உள்ளன.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: