பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றிய மும்பை அணி !!(படங்கள்)

1336 0


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசனின் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் ஐபிஎல்-ன் பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணிக்கு துவக்க ஆட்டகாரர்களாக ரோஹித்- டி காக் ஜோடி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய டி காக் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து வந்தன.

இறுதியில் 20 ஓவர் முடியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் போலார்டு 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் குவித்தார். சென்னை பந்துவீச்சில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், தாஹிர் மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா 32 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன்-டு பிளஸ்சிஸ் ஜோடி துவக்கம் தந்தது. எந்த ஒரு வீரரும் முறையாக ஆடவில்லை. எல்லாம் வருவதும் நடையை கட்டுவதுமாக இருந்தனர். வாட்சன் மட்டும் இறுதி வரை போராடி 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் தாக்கூர், மலிங்கா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக சாம்பியன் ஆகி கோப்பையை கைப்பற்றியது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: