அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக அதிராம்பட்டினம் அண்ணா தெரு அரசு தொடக்கப்பள்ளியில்நமது நாட்டின் 70 வது குடியரசு தின விழா நடைபெற்றது.
தேசிய கொடியினை அதிரை ரோட்டரி சங்க செயலாளர், இசட்.அகமது மன்சூர் தேசிய கொடி ஏற்றி வைத்தூ சிறப்புரை ஆற்றினார்.விழாவில் ரோட்டரி சங்க தலைவர்.MK முகமது சம்சுதீன்,பள்ளியின் தலைமையாசிரியர் விஜயா ,நல்லாசிரியர் சோம சுந்தரம் ஆகியோர் மாணவர்களிடம் குடியரசு தின சிறப்பு குறித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந் நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சோமசுந்தரம்,கல்வி வளர்ச்சி தலைவர்.திரு.M.உதயகுமார் மற்றும் ரோட்டரி சங்க பொருளாளர்.
S.சாகுல் ஹமீது, முன்னால் ரோட்டரி தலைவர் வெங்கடேஸ்,G.கஜேந்திரன் மாவட்ட பிரதிநிதி
T.நவாஸ் கான் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி அலுவலத்தில் பள்ளி கூடங்களில் பணிபுரியும் 30 ஏழை ஆயாக்கள் அனைவருக்கும் தலா சுமார் 500 மதிப்புள்ள பரிசு பொதிகள் வழங்கப்பட்டது.
Your reaction