தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி எதிரே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இன்று (20.1.2019) ஆர்ப்பாட்டம்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி சிறப்பு சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு ஏற்கனவே 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்குக் கூடுதலாக 10% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 60% அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மீண்டும் உயர்சாதி வகுப்பினரே பலனடையக் கூடும் என்ற ரீதியில் இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகள்,அமைப்புகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செந்தலை ரியாஸ் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.
Your reaction