தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சாலை விபத்து ஏற்பட்டு ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று (27/10/2018) இரவு 9.15 மணியளவில் ஈசிஆர் சாலையில் மல்லிப்பட்டினம் – புதுபட்டினம் இடையே விபத்தில் சிக்கி ஐந்து நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளுக்காட்டைச் சேர்ந்த ராபின்ராஜ், டொனால்டோ, சகாயராஜ் ஆகிய மூன்று நபர்களும் தொழில் சம்பந்தமாக மல்லிப்பட்டினம் சென்றுகொண்டிருந்தபொழுது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தற்பொழுது அதிரை தமுமுக அவசர ஊர்தி மூலம் மூன்று நபர்களையும் முதழுதவிக்காக அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ,பின்பு அவர்களை மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள இரண்டு நபர்களை மல்லிப்பட்டினம் மக்கள் சமுதாயம் அவசர ஊர்தி மூலம் தஞ்சாவூர் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Your reaction