அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான கூட்டம் கடந்த மாதம் 20 ம் தேதி நடைபெற்றது. இதில் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் முன்னிலையில் புதிய நிர்வாகம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று புதன்கிழமை(04.07.2018) கடற்கரைத்தெரு புதிய நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் அதிரை பேரூராட்சி அலுவலகம் , காவல் நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகம் ஆகியவற்றுக்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து புதிய நிர்வாகிகளின் பெயர் பட்டியலை அளித்தனர். மேலும் கடற்கரைத்தெரு தொடர்பான ஆலோசனைகளை இப்புதிய நிர்வாகத்தை தொடர்பு கொண்டு ஆலோசிக்கவும் கேட்டுக்கொண்டனர்.
Your reaction