அதிரை கடற்கரைத் தெருவில் தொடரும் அவலம் ! விடிவு எப்பொழுது ?

1279 0


அதிரையின் பிரதான தெருக்களில் ஒன்று கடற்கரைத்தெரு. சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடற்கரைத்தெருவின் பிரதான பிரச்சனைகளில் ஒன்று சாக்கடை பிரச்சனை. இதனை சரிசெய்து தரக்கோரி அப்பகுதி இளைஞர்களும் , முஹல்லாவாசிகளும் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த சாக்கடை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடற்கரைத் தெரு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த சாக்கடை கழிவுநீர் ரோட்டில் செல்வதால் அவ்வழியாக தொழுகைக்கு செல்லும் தொழுகையாளிகழும் , மதரசாவிற்கு செல்லும் குழந்தைகளும் , பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே அதிரை பேரூராட்சி இனியும் தாமதிக்காது , இந்த சாக்கடை பிரச்சனையை சீர்செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: