அதிரை வரலாற்றில் முதல் iOS App வெளியானது..!!!

2129 0


தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் 10வருடங்களுக்கு மேலாக இணைய வழி செய்திகளை உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையம் பொதுமக்களுக்காக வெளியிட்டு வருகிறது.

அதிரையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள், மக்களின் பிரச்சினைகள், தின சமையல் குறிப்புகள், மருத்துவ குறிப்புகள், வாழ்வியல் சிந்தனைகள் போன்ற பல்வேறு விஷயங்களை தலைப்பாக கொண்டு செய்தி வெளிட்டு வருகிறது.

நமது இணையத்தின் முதல் முன்னேற்றமாக சென்ற ஆண்டு ஆண்ட்ராய்டு செயலி வெளியிட்டோம்.

இதன் மூலம் பலர் துல்லியமாக செய்திகளை உடனுக்குடன் சுட சுட கண்டு அறிந்து வந்தனர்.ஆனால், ஐபோன் பயன்பாட்டாளர்கள் அதிகமான நிலையில் அவர்களின் செய்தி படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதத்திலும், சுலபமாக செய்திகளை அறியவும் புதிய ஐபோன் செயலி வெற்றி வாகையுடன் இனிதே (ஏப்ரல் 1ஆம் தேதி) இன்று வெளியானது.

மேலே கூறியபடி, எமது ஆண்ட்ராய்டு செயலியை 1500-க்கும் மேலான பதிவிறக்கம் பெற்று எம் மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இவ்வேளையில், வெகு காலமாகவே நம் மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பொழுது ஐபோனுக்கான செயலி வெளியாகி உள்ளது. தொழில்நுட்பரீதியில் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் இந்த iOS செயலி உருவாகியுள்ளது.

ஜூலை 2008ல் முதன்மதிலில் ஐபோனுக்கான AppStore துவங்கப்பட்டதில் இருந்து, நமதூர் மக்கள் மத்தியில் ஐபோன் பயன்பாடு மிகவும் அதிகம். 10 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் அதிரை மக்களின் சார்பில் அதிரையரால் வடிவமைத்து உருவாக்கிய முதல் செயலியாக நம்முடைய AdiraiXpress ன் iOS செயலி இடம்பிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் மற்றுமொரு வியக்கவைக்கும் நிகழ்வு என்னவென்றால், நம்முடைய AdiraiXpress iOS செயலி வெளியான சிலமணி நேரங்களிலேயே, App Store ன் செய்தி பகுதியில் 169-ஆம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உங்களின் ஆதரவுடன் இன்ஷால்லாஹ் முதல் இடத்திற்கும் இதனை அதிகமாக பதிவிறக்கம் செய்து, 5 Star ரேட்டிங் மற்றும் Review செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்களுடன் இந்த மகிழ்வான செய்தியை பகிருவதில் உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் எங்களுடைய இம்முயற்சி மென்மேலும் தொடர, எப்பொழுதும் போல் உங்களின் மேலான ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

இத்தருணத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும் எமது Android மற்றும் iOS னை வடிவமைத்து உருவாக்கித்தந்த Luffa Labs மென்பொருள் நிறுவனத்திற்கும், (www.luffalabs.com) நம்முடைய வாசகர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

நமது iPhone செயலியை பெற கீழே உள்ள link மூலம் தொடரவும்..

https://itunes.apple.com/in/app/adiraixpress/id1347694491?mt=8

எப்பொழுதும் இணைந்திருங்கள் இது அதிரையர்களின் இணையத்துடிப்பு…!!!

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: