


சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகர் 17-வது தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர், அம்பத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சித்ரபாவை. இவர்களுக்கு ரேஷ்மா (வயது 18) என்ற மகளும், நரேந்தர்(15) என்ற மகனும் உள்ளனர்.
ரேஷ்மா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நரேந்தர், திரு.வி.க. நகர் பல்லவன் சாலையில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. நரேந்தர் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இறைவணக்கம் முடிந்து மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்கு திரும்பினர்.
வகுப்பறைக்கு வந்து அமர்ந்து இருந்த நரேந்தர், திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.
ஆனால் நரேந்தர், சுயநினைவு இன்றி இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் நரேந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி திரு.வி.க. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து மாணவரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தார். விசாரணையில் பள்ளிக்கு காலதாமதமாக வந்த மாணவனை, ஆசிரியர் முட்டி போட வைத்து தண்டனை வழங்கியதில் மாணவன் பரிதாபமாக மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டார். பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவன் ஜெயேந்தரின் உறவினர்கள் திருவிக நகர் பேருந்து பணிமனை முன்பு போராட்டம் நடத்தினர். பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Leave a comment Cancel reply
For Website Enquiry:
+966 553437205
www.gulfglitz.com
பிறமொழிகளில் காண
இரத்த தானம் செய்வோம்
விளம்பரங்களுக்கு
தொடர்பு கொள்ளவும்: +91 9551070008
இதுவரை
- 2,204,330 hits
Your reaction