துபாயில் பணிபுரியும் இந்தியர் வினகதர் அமானாவின் நேர்மையை பாராட்டி துபாய் போலீஸ் பரிசு கொடுத்துள்ளனர். கடுமையான சட்டதிட்டங்களை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரான துபாய், நேர்மையானவர்களை பாராட்டவும் தவறுவதில்லை.
துபாயின் அல் குவைஸ் என்னும் பகுதியில் துப்புரவு தொழில் செய்து வருபவர் இந்தியர் வினகதர் அமானா. அவர் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஒரு பை தென்பட்டிருக்கிறது. பையை திறந்து பார்த்துபோது நகைகள் இருந்துள்ளது. சற்றும் தாமதிக்காமல் நகை பையை அருகில் இருந்த அல் குவைஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் வினகதர். துபாய் போலீஸ் பையை சோதனை செய்ததில் 200,000 தினார் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளன. வினகதரின் நேர்மையை பாராட்டி துபாய் போலீஸ் அவருக்கு பரிசு பொருள்களையும் சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.
Your reaction