ஆண்டவன் கட்டளை எப்போது ரஜினி அரசியலுக்கு வருவது  அப்போது!!!

2260 0


இந்திய அரசியலில் பண பலமும் மக்கள் பலமும் இருக்கும் எவரும் அரசியலில் இறங்கலாம் 
அரசியலில் இறங்குவதை தனது தொண்டர்கள் அல்லது ரசிகர்கள் ஏற்பார்களா ? அல்லது அதை ஏற்க மாட்டார்களா ? என்று முடிவு செய்வதற்க்கு தடுமாற்றம் அடையும் தலைவர்கள் சிலர்கள் இருக்கலாம்

 ஆனால் ஒட்டு மொத்த ரசிகர்களும் சில அரசியல் கோமாளிகளும் அவரை அரசியலுக்கு வாருங்கள் என்று எதிர் பார்த்தும் அழைப்பு கொடுத்தும் ஒரு தெளிவான பதிலை பல வருடங்களாக சொல்லாமல் இழுத்தடிக்கும் துணிவும் சிந்தனை தெளிவும் இல்லாத ஒரு நபரே நடிகர் ரஜினிகாந்த்

 ரஜினி அரசியலில் பிரவேசம் செய்வாரா ?மாட்டாரா ?என்று அடிக்கடி ஊடகங்கள் அவரை விளம்பரம் செய்து பணம் ஈட்ட நினைக்கும் போதெல்லாம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அழைத்து வைத்து கொண்டு மீடியாக்களையும் அழைத்து வைத்து கொண்டு 

ஆண்டவன் கட்டளை போட்டால் நான்  அரசியலுக்கு வருவேன் 
காலத்தின் கைகளில் தான் எனது அரசியல்    பிரவேசம் உள்ளது 

எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று சொல்ல மாட்டேன் ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டாக வருவேன்

 என்றெல்லாம் சினிமாவில் பேசி பழகிய கற்பனை டயலாக்குககளை நிஜ வாழ்விலும் அடிக்கடி அறிக்கையாக தரும் நபரே ரஜினிகாந்த்

 நான் ஒரு தடவை சொன்னால் அது நூறு தடவை சொன்ன மாறி என்று டயலாக் பேசியே தன்னை வீரனாக படத்தில் காட்டி கொண்டவர் 
அவர் ரசிகர்கள் அவருடைய அரசியல் பிரவேசத்தை பற்றி நூறு முறை அவரிடம் கேட்டும் அதற்க்கு ஒரு தடவை கூட உருப்படியான பதிலை சொல்லாதவர் 

ஒரு வகையில் இது அவரே தன்னை முன்னிலை படுத்த ஆடும் நாடகமாக இருக்கும் என்பதே சந்தேகமாக உள்ளது

அவரை விட வயதில் குறைந்த நடிகர்களே அரசியல் களத்தில் அதிரடியாக குதித்து காட்டியுள்ள சூழலில் இந்திய அளவில் பெயர் பெற்றுள்ள ஒரு நடிகருக்கு தயக்கம் வருவது அவருடைய வெற்றியில் அவருக்கே முதலில் தன்னம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது

இளமை பருவத்தில் இருக்கும் ஒரு நபர் அரசியலில் இறங்குவதை பற்றி பத்து வருடம் யோசித்தால் கூட நாற்பதாவது வயதிலாவது அவரால் அரசியல் பிரவேசம் செய்ய முடியும் ஆனால் அறுபது வயதை தாண்டிய நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதையே இத்தனை காலமாக யோசித்து கொண்டுள்ளார் என்று சொன்னால் அவரிடம் திறமை இருக்கிறது என்று வாதத்திற்க்கு ஏற்று கொண்டாலும் அதற்கான துணிச்சலும் ஞானமும் அவரிடம் அறவே இல்லை என்பது தான் சாதாரணமாக புரிய முடிகிறது

எதிர் வரும் டிசம்பர் 31 ம் தேதி அரசியலுக்கு வருவதை பற்றி அறிவிக்கிறேன் என்று மீண்டும் 26-12-17 செவ்வாய் அன்று ரசிகர்களிடம் மீண்டும் பழைய பாட்டையே சற்று வித்தியாசமாக பாடி உள்ளார் 
நம்மை பொறுத்தவரை ரஜினியும் அரசியலுக்குள் நுழைய வேண்டும் அப்போது தான் அவருடைய குருட்டு நம்பிக்கையும் அரசியலில் அவரது பலம் என்ன என்பதையும் அவரே புரிந்து இனிமேலாவது ரசிகர்களை மூளை சலவை செய்வதையும் அடிக்கடி சினிமா பாணியில் அறிவிப்பு தருவதையும் நிறுத்துவார் 
சினிமாக்களை நிஜ வாழ்கையாக நடிகர் நடிகைகளை தேவலோக பிறவிகளாக பார்க்கும் ரசிகர்களை கண்டித்து ஒரு உபயோகமும் இல்லை 

யாருக்காக தங்களை தியாகம் செய்ய முன் வருகிறார்களோ அவர்களே ரசிகர்களின் எண்ணங்களை கானல் நீராக மாற்றும் போது தான் எதார்த்த வாழ்கையை ரசிகர்கள் சிந்திக்க துவங்குவார்கள் 
            நட்புடன்  J .   இம்தாதி

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: