அதிரை நகராட்சியில் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அங்கு சென்று பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிரை நகராட்சியில் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தனியாக மறைவான முறையில் இடவசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அதிரையை பொறுத்தவரை பெரும்பான்மையான பெண்கள் ஹிஜாப் அணிய கூடிய வழக்கம் கொண்டவர்கள் என்பதால் ஆண்களின் பார்வையில் படாத வகையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் பெண்களுக்கென தனி இடவசதி இல்லாத காரணத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டு அவர்கள், பெரும்பாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே வீடுகளுக்கு திரும்பி சென்றுவிடுகின்றனர். இதனால் அதிரை நகராட்சி நிர்வாகம் பெண்களுக்கென திரையிடப்பட்ட இடத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Your reaction