திமுக, அதிமுக-வில் நகரம், ஒன்றியம், மாவட்ட அளவில் பவர்ஃபுல் பதவியாக செயலாளர் பதவி கருதப்படும். இதனால் தான் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கட்சியின் செயலாளர் பதவியை அவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை. MP, MLA பதவிகள் மக்கள் கொடுப்பது. அது எப்போது வரும் எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது. அதாவது அவை தற்காலிக பதவிகள்.
ஆனால் கட்சியின் செயலாளர் போஸ்ட்டிங் அப்படியல்ல. தாத்தா, தந்தை, மகன், பேரப்பிள்ளை என வாழையடி வாழையாக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சி பதவி கை மாறும்.
உள்ளாட்சி தேர்தலில் யார் யாருக்கு கட்சி சீட் கொடுக்கலாம் என சொல்லும் அதிகாரம் நகர செயலாளருக்கு உண்டு. அப்படி இருக்கையில் நகர செயலாளர் என்ன சொல்கிறாரோ அதை தான் கட்சிக்கு கட்டுப்பட்டு நகர்மன்ற தலைவர் செய்வார். இவ்வாறு பவர்ஃபுல்லான அதிரை திமுக நகர செயலாளர் பதவிக்கு ஏன் இன்று வரை இஸ்லாமியர் நியமிக்கப்படவில்லை?
இதனை தட்டிக்கேட்ட ஒருவரை கட்சியை விட்டே ஒதுக்க முயற்சிகள் நடந்துள்ளன. தொண்டர்களின் ஆதரவால் அது நடந்தேறவில்லை.
அதிரை உள்ளாட்சி நிர்வாகத்தில் இதுவரை இஸ்லாமியர் தான் தலைவராக இருந்துள்ளார். இனியும் அவ்வாறே இருக்கும். ஆனால் அதனை தாங்கள் விட்டுக்கொடுத்ததுபோல் சித்தரிப்பது அரசியல் விளையாட்டு. வேண்டுமென்றால் திமுக நகர செயலாளர் பதவியில் ஒரு இஸ்லாமியர் நியமிக்கப்படுவார் என அறிவித்திருக்கலாமே.
Your reaction