நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பிரச்சாரத்தில் இன்று அதிரை நகர வேட்பாளர்கள் மிகத் தீவிரமான முறையில் வாக்கு சேகரித்தனர்.
திமுகவின் கோட்டை என்றழைக்கப்படும் அதிரையில் 27 வார்டுகளில் போட்டியிடும் திமு கழக வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் S.S.பழனிமாணிக்கம் M.A.,B.L., MP., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி ப.பாலசுப்பிரமணியன் Ex. M.L.A., மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை B.Sc., B.L., ஆகியோர் இறுதிகட்ட பிரச்சாரம் செய்தனர்.
இதனையடுத்து பேசிய அதிரை திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன், அதிரை நகராட்சியில் திமுக வெற்றி பெற்றால் நகராட்சித் தலைவராக இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த ஒருவரே நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபடுவார் எனக் கூறினார்.
நகராட்சி சேர்மனாக இஸ்லாமியரை தேர்ந்தெடுப்பது குறித்து பேசுவது ஆறுதல் அளித்தாலும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் திமுக மெளனமாக இருப்பது வேதனைக்குறிய செயலாய் இருப்பதாக அதிரையர்கள் பொரிந்து வருகின்றனர்.
Your reaction