அதிராம்பட்டினம் நகர் புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 27 வார்டுகலும், போட்டியிடுகிறது.
இந்த நிலையில் வேட்புமனுவின் கடைசி நாளான இன்று 7வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் கல்லுக்கொள்ளை ஆமினம்மாள் ஷாகுல் ஹமீது மதியம் 2:30மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் மணுதாக்கல் செய்தார்.
பின்னர் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளருக்கு நகர செயளாலர் இராம குணசேகரன், நமது நகராட்சி அடிப்படை கட்டமைப்பு பெற்று முன்மாதிரி நகரமாக மாற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்றார்.
இச்சந்திப்பின் போது, MMS அப்துல் கரிம், 20வது வார்டு வேட்பாளர் பகுருதீன், சிறுபான்மை அணி செயலாளர் மரைக்கா கே இதிரீஸ் அஹமது இளைஞர் அணி செயலாளர் மொய்தீன் உள்ளிட்ட திமுக பொருப்பாளர்கள் உடனொருந்தனர்.