முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலையில் திமுக அரசு செய்த துரோகம், உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லீம்களுக்கான பிரதிநிதிதுவத்தை குறைத்தது உள்ளிட்ட காரணங்களால் திமுக மீது இஸ்லாமியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனிடையே அதிரையில் கேட்ட 5 வார்டுகளை முஸ்லீம் லீக்கிற்கு கொடுக்காமல் வெறும் ஒரு வார்டை மட்டும் வழங்கிய திமுக புள்ளிகள் மீதும் முஸ்லீம் லீக் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அதிரை நகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து SDPI, மமக, மஜக ஆகிய சமூகதாய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் SDPI சில இடங்களை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஆனால் மமக, மஜக இடையே உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணி உருவாகும் பட்சத்தில் மக்களின் திமுக எதிர்ப்பு மனநிலை மற்றும் ஜமாஅத்களின் ஆதரவுடன் நகராட்சி மன்றத்தை சமூதாய கட்சிகள் எளிதில் கைப்பற்ற முடியும் என்றும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Your reaction