தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தீவிர களப் பணியாற்றி வருகிறார்கள்.
விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்ச்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகிறார்கள்.
இதில் ஆளும் திமுக கூட்டணியில் இருந்து வருகின்ற காங்கிரஸ்,முஸ்லீம் லீக்,கம்யுனிஸ்ட், விசிக,மமக உள்ளிட்ட கட்சிகள் அடக்கம்.
மேற்குறிப்பிட்ட கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு சாதகமான வார்டுகளை குறிபிட்டு நகர திமுகவிடம் கடிதம் வழங்கி உள்ளது.
இந்த நிலையில், எந்நேரமும் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடாலாம் என எதிர்பாக்கபட்ட நிலையில் கூட்டணிகளுக்கு வார்டுகள் ஒதுக்காதது குறித்து கவலையடைந்து உள்ளனர்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தொண்டர்கள் தங்களின் நகர கிளையை துளைத்து எடுத்து வருகிறார்கள்.
குறுகிய கால அவகாசத்தை கணக்கில் கொண்டு ஆளும் திமுக அதிரை நகர கிளை எந்த கட்சிக்கு என்ன வார்டு என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Your reaction