அதிரை வழியாக காரைக்குடி – திருவாரூர்க்கு ரயில் சேவை !
திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான மீட்டர்கேஜ் இருப்பு பாதையை அகற்றி அகல பாதையாக மாற்றப்பட்டது.
பணிகள் 100℅ முடிவடைந்த நிலையில் இவ்வழித்தடத்தில் ரயில்கள் இயக்காமல் ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகம் மெளனம் காத்திருந்தன.
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கம்,வணிகர்கள் இப்பாதையில் ரயில்களை இயக்க தொடர் கோரிக்கை வைத்தனர்.
அதன்பிறகு டெமு ரயில் சேவையை தொடங்கியது இது காரைக்குடிக்கும்- திருவாரூருக்கும் இடையே இயக்கப்பட்ட இந்த ரயிலில் பொதுமக்கள் பயன் பெற்று வந்தனர். இதனிடையே கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டில் அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கில்.தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில்கள் இயங்க.ஒன்றிய அரசு அனுமதி வழங்கிய நிலையில், பட்டுக்கோட்டை வட்டார ரயில் பயணிகள் சங்கத்தினர் தங்கள் வழித்தடத்தில் ரயில்களை இயக்க ஆவண செய்ய வேண்டுமாய் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை அடுத்து தென்னக ரயில்வே சார்பில் இன்று ஒரு ஆனை பிறப்பிக்கப்பட்டு உள்ளது அதில் திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் ஆகஸ்ட் 4 முதல் மீண்டும் டெமு ரயிலை இயக்க உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி காலை 8-15மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்படும் ரயில் அதிரைக்கு காலை 10-44 மணிக்கு வருகிறது.
மறுமுனையில் காரைக்குடியில் இருந்து மாலை 4-30 புறப்படும் ரயில் அதிராம்பட்டினத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து திருவாரூருக்கு இரவு 8-30மணிக்கு சென்றடைகிறது.
இந்த நிலையில் இவ்வழிதடத்தில் சென்னை தொடர்புடைய மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள் என்றும், வணிகம் நிறைந்த இத்தடத்தில் சென்னை காரைக்குடி இராமேஸ்வரம் சென்று வர எக்ஸ்பிரஸ் இயக்க வைத்த கோரிக்கை இன்றளவும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Your reaction