தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் இவ்வேளையில் தஞ்சை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்து விட்டது.
அதேபோல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார முன்னெடுப்புகளை அந்தந்த பகுதியை ஊராட்சி மன்றங்கள், பேரூராட்சிகள், நகராட்சியில் எடுத்து வருகின்றன.
இதேபோல மல்லிப்பட்டினம் பகுதிகளில் கிருமி நாசினி போன்ற சுகாதர பணிகளை அனைத்து பகுதிகளுக்கும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Your reaction