தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவைகள் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இம்முறை 8 பேர் களம் காண்கின்றனர். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு மின்னணு வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும் வரிசையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மின்னணு வாக்கு இயந்திரத்தில்
முதல் இடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கா. அண்ணாதுரை,
இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர். ரெங்கராஜன்,
மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீர்த்திகா அன்பு,
நான்காம் இடத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சதாசிவம்,
ஐந்தாம் இடத்தில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளர் சுந்தர்ராஜ்,
ஆறாம் இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் SDS. செல்வம்,
ஏழாம் இடத்தில் அண்ணா திராவிடர் கழக வேட்பாளர் மெய்காப்பான்,
எட்டாம் இடத்தில் சுயேட்சை வேட்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
Your reaction