சிலிண்டர் மானியம் பெற இது கட்டாயம்… இணைப்பது ஈசி!

437 0


சமையல் எரிவாயுவுக்கான மானியம் பெற ஆதார் அவசியமாக உள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் போன் கால் மூலமாகவே மிகச் சுலபமாக ஆதாரை இணைக்க முடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்…
ஆதார் அவசியம்!

இந்தியாவில் ஆதார் இல்லாமல் எதுவும் இல்லை என்றாகிவிட்டது. இது தனிமனித அடையாளமாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற கட்டாயமாக உள்ளது. குறிப்பாக, அரசின் மானிய உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அவசியமாகும். அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் மானிய உதவி பெறுவதற்கும் ஆதார் அவசியமாக உள்ளது. நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் மானிய உதவி டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இடைத்தரகு மற்றும் சுரண்டல் பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன.
இண்டேன் நிறுவனம் சமீபத்தில் எஸ்.எம்.எஸ…

மற்றும் மொபைல் அழைப்பு வாயிலாக ஆதாரை இணைக்கும் வசதியைக் கொண்டுவந்தது. ஆதார் இணைப்புக்கு முதலில் உங்களது மொபைல் நம்பர் சிலிண்டர் ஏஜென்சியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்வதற்கு IOC std code என்று டைப் செய்து 1800-2333-555 என்ற இண்டேன் கஸ்டமர் கேர் நம்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். மொபைல் நம்பர் பதிவானவுடன் ஆதார் இணைப்புக்கு UID Aadhaar number என டைப் செய்து கஸ்டமர் கேர் நம்பருக்கு அனுப்ப வேண்டும். இதன் பின்னர் கேஸ் ஏஜென்சியுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும்.

ஆதாரை போன் கால் மூலமாக இணைப்பதற்கு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 1800 2333 5555 என்ற எண்ணை அழைக்க வேண்டும். அதில் உங்களது ஆதார் நம்பரைக் கூறினால் சிலிண்டர் இணைப்பில் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.

ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் ஆதாரை இணைக்க முடியும். ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் சென்று உங்களது முகவரி போன்ற விவரங்களைப் பதிவிட்டு சிலிண்டர் இணைப்பு, கேஸ் ஏஜென்சி, இண்டேன் கேஸ் ஐடி போன்றவற்றைப் பதிவிட வேண்டும். இதன் பின்னர் submit கொடுத்தால் உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு submit கொடுத்தால் ஆதார் இணைக்கப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: