அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!

1083 0


அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது.

அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக இருந்த சேக் அப்துல்லா அவர்கள் உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பாக மரணம் அடைந்துள்ளார் அப்போது முதல் அவிஸோ காப்பகத்தை அபகரிக்க சிலர் முயற்ச்சி செய்துள்ளதாக தெரிகிறது.

அதில் ஒருவர் அங்கு ட்ரைவராக பணிபுரிந்த கூத்தாடிவயலை சேர்ந்த ரவுடி விவேகானந்தன் என தெரிகிறது. இவர் பாஜக கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவன் காப்பகத்தில் இருந்த ஹலிமா என்ற பெண்ணுடன் சேர்ந்து கொண்டு ட்ரஸ்டின் காசோலையை திருடி 4,85,000 ரூபாயை திருடிச்சென்றுள்ளான்.

இந்நிலையில் 26-01-21 அன்று நள்ளிரவு குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த மெளலவி S.S.சேக் அப்துல்லா அவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த ரவுடி விவேகானந்தன் தலைமையிலான கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வெளியே வரும்படி அழைத்துள்ளனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட மெளலவி S.S.சேக் அப்துல்லா அவர்கள் கதவை திறக்காமல் காவல்துறைக்கும் அதிரையில் உள்ள உறவினர்களுக்கும் போன் செய்து தகவல் சொல்லியுள்ளார், பிறகு அருகில் இருந்தவர்களை சப்தமிட்டு அழைத்ததும் அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இந்த நிகழ்வை அதிரை SDPI கட்சி வண்மையாக கண்டிக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் மேலும் நிகழாமல் தடுக்க காவல்துறை இது போன்ற ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என SDPI கட்சி சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

தவறும் பட்சத்தில் அதிரையில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் SDPI மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்து கொள்கின்றோம்.

இவண்,
அஹமது அஸ்லம்,
நகர தலைவர்,
SDPI கட்சி,
அதிரை நகரம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: