அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் ! (படங்கள்&தீர்மானங்கள்)

1331 0


அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 83-வது மாதாந்திர கூட்டம் கடந்த 11/12/2020 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை அமைப்பின் செயலாளர் A.M. அஹமது ஜலீல் முன்னிலை வகித்தார். உறுப்பினர் இக்பால் கிராஅத் ஓதினார். துணை தலைவர் அஹமது அஸ்ரப் வரவேற்புரை ஆற்றினார். கொள்கை பரப்பு செயலாளர் P. இமாம்கான் சிறப்புரை ஆற்றினார். துணை செயலாளர் ஷேக் மன்சூர் அறிக்கை வாசித்தார். இறுதியாக இணைத்தலைவர் A. சாதிக் அகமது நன்றியுரை கூறினார். இக்கூட்டத்தில் அதிரைவாசிகள் பலரும் பங்கேற்றனர். இதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் :

1) ABM தலைமையகத்தின் பென்ஷன் திட்டத்தின் தேவைக்கேற்ப வரும் ஆண்டு 2021 முதல் ரியாத் பைத்துல்மாலின் மூலம் சேவை அடிப்படையில், இன்ஷா அல்லாஹ் 30-க்கு மேற்பட்ட நபர்களை சேர்ப்பது விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு அத்திட்டத்தின் தரஜாவையும், அதன் சிறப்பைப்பற்றியும் இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு இம்மாதம் முதல் ஆர்வமுள்ள நபர்களை சேர்ப்பதென முடிவு எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் ABM ரியாத் கிளை வாட்ஸப் குரூப் மூலம் தங்களின் பெயர்களை பதிவு செய்து ஆதரவற்ற அதிரை பெண்களுக்கு உதவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது.
2) இலவச மருத்துவ திட்டம் அடிப்படையில் ABM தலைமையகம் மூலம் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் திட்டத்திற்கு பொருளாதார உதவியை அளித்திடுமாறு இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
3) “நமதூர் நலன் நமது நலன்” என்ற அடிப்படையில் தற்சமயம் ஏற்பட்டுள்ள கொசுத்தொல்லை சுகாதாரமின்மை காரணமாக செம்மைப்படுத்துதல் பற்றியும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து பொது அமைப்புகள், பொது சேவை தரப்புகளுக்கும், பஞ்சாயத்து போர்டு நிர்வாகத்திற்கும், ஊர்மக்கள் ஒத்துழைப்பு அளிப்பதுடன் நமதூர் பேரூராட்சி தேவைகளை அறிந்து ABM சார்பாக தேவைகளை பஞ்சாயத்து போர்டு மூலம் முடிந்தளவு பரிந்துரை செய்து நிவர்த்தி செய்ய உறுதுணை ( முயற்சி ) செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) சமீபத்தில் இறையடி சேர்ந்த மர்ஹும் ஹாஜி சகோ.ராபியா மற்றும் ஹாஜி அப்துல் காதர் ( PROFFISSIOR ) அவர்களின் துணைவியார் இவருக்காக இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு துஆ செய்யப்பட்டது.

5) சமீபத்தில் இலவச தையல் மிசின் ABM மூலம் வழங்கிய பெயர்சொல்லாத சகோதரர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு இது போன்று பல நல்லுள்ளங்கள் மூலம் நமதூர் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு தொடர்ச்சியாக உதவிடுமாறு இக்கூட்டத்தில் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) சமீபத்தில் ஜித்தாவிலிருந்து இடம் பெயர்ந்து ரியத்திற்கு வந்துள்ள சகோதரர் முஹம்மது ஷாபி ( ஜித்தா அய்டாவின் நிரந்தர உறுப்பினர் ) அவர்களை வரவேற்றும் அய்டாவில் பணியாற்றியது போல் ரியாத் பைத்துல்மாலுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) இன்ஷா அல்லாஹ் அடுத்த 84-வது அமர்வு 2021 JANUARY மாதம் 8-ம் வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரைவாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

படங்கள் :

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: