இக்கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் திருச்சி மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி அவர்களும் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முகமது புகாரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் இந்த கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் முஹம்மது ஜாவித் அவர்களும் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர,கிளை நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.
வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பி கொடுக்க வேண்டியும் , மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க கோரியும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
இறுதியாக எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர இணைச் செயலாளர் C.அஹமது.MSC அவர்கள் நன்றியுரை கூறினார்.
Your reaction