ஆபாசத்தை பரப்பும் கருத்தடை சாதனம் மற்றும் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களுக்கு தடைவிதித்து உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இன்று பலரும் விளம்பரங்களை பார்த்தவுடன், அதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று எண்ணுவதுண்டு. ஆனால், விளம்பரத்தில் ஆபாசமாக காட்டப்படும் காட்சிகளால் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் சீர்கேடான பாதையை நோக்கி செல்ல இந்த விளம்பரங்கள் வழிவகுக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றது.
ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள் உள் ஆடை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், கருத்தடை சாதனம், பாலியல் பிரச்சனை தொடர்பான ஆபாச மருத்துவ விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியம் தொடர்பான ஆபாச விளம்பரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Your reaction