சிறுநீரக நோயாளிகளுக்கு அதிரை பைத்துல்மால் டயாலிசிஸ் இலவச மருத்துவ உதவி!!

955 0


அதிரையில் கடந்த வருடங்களில் 250 க்கும் அதிகமானோர் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அதிரையில் உள்ள தன்னார்வலர்கள் அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

சிறுநீரகம் பாதிப்படைந்து, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு, அதிரை பைத்துல்மால் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ், இலவச டயாலிசிஸ் மருத்துவ உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தகுதியுள்ள சிறுநீரக நோயாளிகள் அதிரை ஷிஃபா மருத்துவமனை டயாலிசிஸ் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுநீரக சிகிச்சை பெற விருப்பமுள்ள நோயாளிகள் மருத்துவரின் மருத்துவ ஆவணங்களுடன் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தை தொடர்புகொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு,

செல் : 94438 63082

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: