இன்றைய சிந்தனை துளிகள்!!

1919 0


உதவிக் கரம் நீட்டுவோம்…!

ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வது மனித இயல்பு, ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும் இயல்பே குடும்ப வாழ்க்கையாக உருவாகியுள்ளது…

இந்த உதவும் மனப்பான்மையானது குடும்ப வாழ்க்கையைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக நிலைத்திருக்க வேண்டும்…

ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும், மற்றவருக்கு உதவி செய்ததால் வாழ்க்கையில் கெட்டுப் போனவர் என்று எவருமேயில்லை…

இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். பெறுவதைவிட, கொடுப்பதே உயர்வான செயல்…!

பிறருக்குத் தொந்தரவு தருவது, சீண்டிப் பார்ப்பதே சிலரின் வேலையாக இருக்கும். அவர்களுக்கு மகிழ்ச்சியின் மகத்துவம் புரிவதில்லை என்றுதான் பொருள்…

ஆனால்!, இன்றைய காலகட்டத்தில் ஒருசிலர் உதவ வேண்டிய நேரத்தில், சிலர் மனிதாபிமானம் இல்லாமல் பணத்தை மட்டுமே பெரிதாக பார்க்கிறார்கள்…

இருந்தாலும், ஒரு சிலர் சகோதரத்துவத்தோடு உதவி செய்பவர்களால்தான் இன்னமும் மனித குலம் உயிரோடு வாழ்கிறது, மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை விட ,வேறு எதிலும் அப்படியொரு மகிழ்ச்சி நமக்கு கிடைக்காது…

இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய்ய வேண்டும், நம்மை நாடி வந்தவர்களுக்கு எவ்வித மறுப்பும் கூறாமல் உதவிகளைப் புரிய வேண்டும்…

ஆம் நண்பர்களே…!

நம்மை நாடி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்து வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை…!

அதுதான் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும்!, அடுத்தவர் வாழ்விலும் ஒளி ஏற்றி வைக்கும்…!!

இல்லாதவர்களுக்கு உதவி கரம் நீட்டுவோம்…!
அவர்களின் கண்ணீர் துடைப்போம்…!
அனைவரிடமும் அன்பு காட்டுவோம்…!

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: