தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகவும், கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனைகளில் உடனடியாக சேர்த்து சிகிச்சையளிப்பதற்காகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமுமுகவிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், பட்டுக்கோட்டை நகர தமுமுகவின் ஆம்புலன்ஸை கொரோனா சிகிச்சைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தமுமுக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா தலைமையில் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் தற்காலிகமாக ஆம்புலன்ஸ் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டது.
அதிரையில் உள்ள ஒரு இணையதளத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் முழுமையாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது என்கிற செய்தி முற்றிலும் தவறானது என்று தமுமுக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Your reaction