அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்தில் இன்று 07.07.2020 செவ்வாய் கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது நாம் தமிழர் கட்சி சார்பாக மின்சார வாரியத்தையும் தமிழக அரசையும் கண்டித்து பதாகை ஏந்திய சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து நடைபெற்றது.
கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை வாட்டும் விதமாக இந்த நான்கு மாத காலத்தில் தமிழக மக்கள் அதிகபடியான மின்சார கட்டணத்தினால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். மின்சார கட்டணத்தையும், அத்துடன் கூடுதலாக RC சார்ஜஸ் மற்றும் BPSC சார்ஜஸ் போன்ற தாமத அபராத கட்டணத்தையும் வசூல் செய்கிறார்கள்
கோரிக்கைகள் .
- கொரோனா பேரிடர் கலத்தை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தில் 50 சதவீதம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தள்ளுபடி செய்யவேண்டும்.
- மின் கட்டணத்துடன் கூடுதல் அபராத தொகையாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை RC Charges, BPSC Charges போன்று மக்கள் விரோத அபராத கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.
- இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கெடுக்கும் மின் கணக்கீடு முறையை மக்கள் நலன் பெரும் வ்கையில் மாதத்திற்கு ஒரு முறை என்று கணக்கிட வேண்டும்.
- கொரோனா பேரிடர் காலத்தில் வருமானத்தில் தத்தளிக்கும் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு அனைத்து தமிழக மக்களுக்கும் வீட்டு மின்கட்டண செலுத்துதலில் தள்ளுபடியுடன் கூடிய கால அவகாசம் நீட்டிக்கபடவேண்டும்.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அண்ணன் தேவராஜ் , பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் நெல்சன் பிரபாகர் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி அதிரை நகர செயலாளர் ஜெஹபர் சாதிக் மற்றும் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் எரிப்புறக்கரை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Your reaction