தஞ்சை மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றுவோம்

540 0


தஞ்சை மாவட்டதை கொரானா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றியமைத்து காட்டுவோம்.

இப்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் யாரும் வெளியே செல்லப்போவதில்லை. மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்வோரும் வீட்டுக்குள் நுழையும் முன் கை, கால், முகத்தை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். ஆடைகளைக் கிருமிநாசினி கலந்த தண்ணீரில் ஊறவைத்துத் துவைத்து வெயிலில் காயவைக்க வேண்டும்.

குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

காரணம் இவற்றால் இருமல், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் எதனால் தொற்று ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்படலாம். அதனால், குழந்தைகளின் பொதுவான உடல்நலத்தில் அக்கறை தேவை.

வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் கொரானா அறிகுறிகள் என்பதால் சத்தான சமச்சீர் உணவு அவசியம்.

சளி, இருமல் இருக்கிறவர்கள் ஒரே கைக்குட்டையை நாள் முழுவதும் பயன்படுத்தாமல் அவ்வப்போது அதை மாற்ற வேண்டும்.

பயன்படுத்திய கைக்குட்டைகளையும் துணியையும் கிருமிநாசினி கலந்த தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

மற்றவர்களிடம் இருந்து விலகியிருப்பது அவசியம்..

முகக் கவ சம் அணிவது நல்லது.

நாம் கடைபிடிக்கும் சுய கட்டுப்பாடும், சுத்தமும் மட்டுமே நம்மை காப்பாற்றும்.
எனவே,

மிக மிக  அத்தியாவசிய தேவையின்றி வெளியில் போகாதீர்கள்.

அப்படியே போக நேர்ந்தாலும் முகக்கவசம், கையுறை இல்லாமல் போகாதீர்கள்

எந்த வெளி நபரை சந்தித்த பின்னும் மறக்காமல் சோப்பு, handwash போன்றவை போட்டு நன்றாக கையை கழுவவும்

வீட்டில் இருப்பதை வைத்து உண்ண பழகுங்கள்.

எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் உணவுகளை  எடுத்துக்கொள்ளுங்கள்

லேசான அறிகுறிகளாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே நடவடிக்கை எடுங்கள்.

தொண்டயை மிக ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள் (இஞ்சி சாறு போன்றவற்றை தினமும் எடுப்பது நல்லது).

உறவினர், அநாவசியமான நபர்கள் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.

தயவுசெய்து அலட்சியம் வேண்டாம்.

எனவே கொரான இல்லாத தேசமாகவும் அதிலும்  நம் தஞ்சாவூர் மாவட்டத்தை கொரானா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவோமாக.

SRK.அசன் முகைதீன்.B.A.,
தஞ்சாவூர் மாவட்ட தலைவர்
தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா NHRC OF INDIA)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: