வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு உதவ எஸ்டிபிஐ கட்சி குழு அமைப்பு

1200 0


வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பும் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறும் அதற்கான தொடர்பு எண்களையும் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாமுதீன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது,

கொரோனா பரவல் தடுப்புக்காக இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை காரணமாகவும், சர்வதேச விமான சேவைகள் ரத்து காரணமாகவும், இந்தியாவிற்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வந்த நிலையில், தற்போது அவர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அழைத்து வரப்படுகின்றனர்.

இதன்படி வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் மூலம் தாய்நாடு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களில் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், வேலை இழந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகம் அழைத்து வரப்படவுள்ளனர். அவ்வாறு தமிழகம் திரும்புபவர்கள் அரசின் வழிகாட்டுதல்படி ஒரு வார காலம் கட்டணமில்லா அரசின் முகாம்கள் அல்லது அரசு அங்கீகரித்த கட்டணம் செலுத்தும் தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

அவ்வாறு தமிழகம் திரும்பி முகாம்கள் அல்லது விடுதிகளில் தனிமைப்படுத்தலில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அவர்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பின்வரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சென்னை விமான நிலையம் வருவோர் தொடர்புக்கு:

அன்சாரி
காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர்
தொடர்பு எண்: 9840248079

திருச்சி விமான நிலையம் வருவோர் தொடர்புக்கு:

ஹஸ்ஸான் இமாம்
திருச்சி மாவட்ட தலைவர்
தொடர்பு எண்: 9171833095

ஆகிய எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளியீடு
சமூக ஊடக அணி
திருச்சி மாவட்டம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: