பட்டுக்கோட்டை அருகே மணல் கொள்ளையை தடுத்தவர் மீது சரமாரி தாக்குதல்…!

604 0


ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள அம்மன்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமுத்து இவர் நேற்று நள்ளிரவு தனது வயலுக்கு சென்றபோது இவரது வயலை ஒட்டிய காட்டாறு மணலை லாரியில் அதே ஊரை சேர்ந்த ஜெயக்குமார் ரஞ்சித்குமார்
ரவீந்திரன் ஆகியோர் மணலை அள்ளிக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த தங்கமுத்து தனது செல்போன் மூலமாக படம் எடுத்தார் இதை பார்த்த அந்த மூவரும் தங்க முத்துவை அரிவாளால் வெட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் படுகாயமடைந்த தங்கமுத்து பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிகிச்சையில் இருந்த தங்கமுத்து ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமல கண்ணனுக்கு புகார் ஒன்றை தெரிவித்திருந்தார் அந்த புகாரில்
மூன்று மணல் கொள்ளையர்கள் என்னை கொலை செய்ய வந்தார்கள் என்றும் இந்த மணல் கொள்ளைக்கும் கொலை முயற்சிக்கும் சரவணன் என்ற திருவோணம் போலீஸ் ஏட்டு காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஎஸ்பி உத்தரவிட்டதன் பேரில் திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள் மணல் கொள்ளையர்களுக்கு உதவியாக இருந்த ஏற்று சரவணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி செங்கமலக் கண்ணன் கூறியிருக்கிறார்.

மணல் கொள்ளையர்களுக்கு ஒரு போலீஸ் ஏட்டு உதவியாக இருந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுYour reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: