Wednesday, May 8, 2024

லாக்டவுன் 4.0, இரவு ஏழு மணிக்கு மேல் வெளியே வர தடை ~உள்துறை அமைச்சகம்…

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும் வரையறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட லாக்டவுன் இன்றுடன் முடியும் நிலையில் தற்போது லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுக்க 4-வது கட்ட லாக்டவுன் புதிய வகையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான தாளர்வுகள் அறிவிக்கப்ட்டுள்ளது..

தடை தொடரும் சேவைகள்:

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்திற்காக தடை நாடு முழுக்க தொடரும்

இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை

கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு

கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வீட்டுக்கு வீடு ஆய்வு

பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம்

பொது இடங்களில் பணியாற்றும் இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம்

மெட்ரோ ரயில்கள் எப்போதும் போல இயங்காது

தாங்கும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் செயல்படாது

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை

மால்கள், ஜிம்கள், பார்க், தியேட்டர்கள் எப்போதும் போல செயல்படாது

விளையாட்டு நிகழ்ச்சிகள், அது தொடர்பான கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் சமூக இடைவெளி அவசியம் – 50 நபர்களுக்கு மேல் கூட தடை

மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி

பொது இடங்களில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை

மத நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது

அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் மற்றும் சேவைகள்:

மாநிலங்கள் ஒத்துழைத்தால் மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து மேற்கொள்ளலாம்

மாநிலங்கள் ஒத்துழைத்தால் மாநிலங்களுக்கு இடையே சாதாரண போக்குவரத்து தொடர்ந்து செயல்படும்

மாநிலங்களே சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் மண்டலங்கள் குறித்த முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

மத்திய அரசின் வழி காட்டுதலின்படி மாநிலங்களே சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் மண்டலங்கள் குறித்த முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் அடிப்படை சேவைகளுக்கு மட்டுமே அனுமதி. அடிப்படை தேவை இல்லாதா விஷயங்களாக மக்கள் இங்கே வெளியே வர கூடாது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக கட்டுப்பாடுக்குள் தொடரும் .

மேலே தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட விஷயங்களை தவிர மற்ற விஷ்யங்களுக்கு அனுமதி

ஆரோக்ய சேது செயலியை அலுவலகம் செல்லும் நபர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்

சரக்கு வாகனங்கள் எப்போதும் போல மாநிலங்களுக்கு இடையே செல்ல அனுமதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...