கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் தங்கி வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ளனர்.
அவ்வாறு அதிரையில் தங்கி வேலை பார்த்து வரும் பீஹார் மாநிலத்தை சேர்ந்த 60 தொழிலாளர்களுக்கு இன்று வியாழக்கிழமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் அரிசி, காய்கறிகள், எண்ணெய், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் பங்கேற்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அப்போது அதிரை பகுதி தலைவர் S. முஹம்மது ஜாவித் மற்றும் மேலத்தெரு யூனிட் செயலாளர் பரோஸ்கான் ஆகியோர் உடனிருந்தனர்.


Your reaction