உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் கடும் நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் பட்டுக்கோட்டையில் நாளை கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பொதுமக்களும் பயன்பெறக்கூடிய வகையில் உயிர்காக்கும் உன்னத சேவையாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் மணிக்கூண்டு பள்ளிவாசல் ஜமாத் சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பட்டுக்கோட்டை ஹாஜி காதர் முகைதீன் வக்ஃப் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Your reaction