இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்வு..!!

620 0


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,500-ஐ தாண்டிவிட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 471-ல் இருந்து 492 ஆக இன்று உயர்ந்துள்ளது. 451 இந்தியர்கள் 41 வெளிநாட்டினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனாவால் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 37 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

Source: Dailythanthi

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: