தமிழக அரசு கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை மாநிலம் எங்கும் அமல்படுத்தி சில மாதங்கள் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்பட்டது.
இதன்பிறகு அழுத்துபோன அதிகாரிகள் கடை குடோன்களில் நடத்திய திடீர் சோதனைகளை கைவிட்டு விட்டனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் சர்வ சாதாரணமாக பிளாஸ்டிக் பைகள் புழங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து நம்மிடையே பேசிய ஒருவர், தமிழக அரசு லாட்டரி,குட்கா,உள்ளிட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையின் பலனாக இதனை எல்லாம் தடை விதித்தார்.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அம்மாவின் நாமத்தை முழங்கி கொண்டே அவர் தடை செய்த, எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கின்றனர் என்றார்.
எனவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கான தடை முழுமையாக செயல்படுத்த அதிகாரிகள் முனைப்பு காட்டிட வேண்டும்.
வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பை நல்கி நாளைய நமது தலைமுறையினர் நிம்மதியாக வாழ வழிவகை செய்திடல் அவசியமாகிறது.
Your reaction