டீக்கடை காரசாரக் கட்டுரை!!

438 0இலியாஸ்:: என்ன மாப்ளே எங்கே இந்தப் பக்கம் வாங்க டீ யைச் சொல்றது

அஸ்லம்:: ஆமா மாப்ளே நடக்கலாமுன்னு வந்தேன் சரி டீ வேணாமுன்னா விடவா போறீங்க சொல்லுங்க மாப்ளே

இலியாஸ்:: டெல்லியில் முதல்வர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று தெரியலேயே.

அஸ்லம்:: என்ன மாப்ளே செய்யிறது ரொம்பவும் பாதிப்பிற்குள்ளாகி நிற்கிறதே நம்ம சமுதாயம் இறைவனிடம் கையேந்துவோம் அநியாயக்காரர்களிடமிருந்து எங்களை பாதுகாப்பாய் என்று.

இலியாஸ்::காதீர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை பார்த்தாயா மாணவர்கள் ஒற்றுமையே எதிர்கால இந்தியா .

அஸ்லம்:: உண்மை என்ன மாப்ளே நமதூர் பெண்கள் துடைப்பத்தை ஏந்தி போராடுனாங்களே கவனித்தீரா

இலியாஸ்:: ஆமா மாப்ளே நானும் பார்த்தேன் பெண்கள் விழிப்புணர்வோடு இருப்பதையே காட்டுது

அஸ்லம்:: பட்டுக்கோட்டையில் தொடர் போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள் புகழனைத்தும் இறைவனுக்கே

இலியாஸ்:: நம்ம முதல்வர் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார் என்று நம்புவோம்.அதிகமாக இறைவனிடம் கையேந்துவோம்

அஸ்லம்:: என்னாடா மாப்ளே காட்டுப்பள்ளி கந்தூரி என்று திடீர் புரளி கெளம்புனதே என்னவாயிற்று

இலியாஸ்:: கந்தூரி சந்தோசமெல்லாம் குடியுரிமை முடிவுக்கு வந்தால்தான் என்று நம்ம ஊர் மக்களுக்கு தெரியாதா என்ன.அப்படியே போனாலும் பிள்ளைகளுக்குகாக தர்காவுக்கு போயிட்டு வரட்டும் கந்தூரி ஊர்வலம் தயவுசெய்து வேணாம்

அஸ்லம்:: என்ன மாப்ளே நீதிபதிகள் ஆறு பேருக்கும் பன்றிக் காய்ச்சலாமே செய்திகள் பார்த்தேனே நீ பார்த்தாயாடா

இலியாஸ்:: மாப்ளே இறைவன் மிகப்பெரியவன் அவனை மறந்துவிட்டு எந்த ஒரு அநியாயத்தையும் செய்து விட்டு தப்பிவிட முடியாது என்பதே எனது ஆணித்தரமான வாதம்.

அஸ்லம்:: என்ன மாப்ளே போலீஸ் முன்னேயே துப்பாக்கியோடு செல்கிற துணிவு யாருடா கொடுத்தது.ஒருத்தன் ஃபேஸ்புக்கிலே மூலநோய்க்காரன் போல உட்கார்ந்து கொண்டு சுட்டுத்தள்ள சொல்றான் இதற்கெல்லாம் வழக்கில்லையா கைதில்லையா

இலியாஸ்:: கண்டிப்பாக இருக்கும் இங்கில்லாவிட்டாலும் இறைவனிடத்தில் .அவர்கள் பேசுவதை சட்டத்திற்கு முன் கொண்டு செல்ல வேண்டும் மாப்ளே .

அஸ்லம்:: தமிழகத்தில் அமைதியாக வாழக்கூடிய மக்களை பிரித்தாள நினைக்கும் எந்த சக்தியாலும் முடியாது .

இலியாஸ்:: ஆமாடா ஒரு எச்சை பொறுக்கி நம்ம சமுதாய மக்களை இந்துக்களிடம் வெறுப்பை உண்டாக்கவே ரொம்ப போராடுறான் போஸ்ட் போடுகிறான் அவன் தலைகீழா நின்னு தண்ணீர் குடித்தாலும் முடியாது மாப்ளே இந்துக்கள் முஸ்லீம்கள் கிருஸ்தவர்கள் அறிவு சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் அனைவருமே ,சுய சிந்தனை உள்ளவர்களே.

அஸ்லம்:: என்ன மாப்ளே பீகாருல NRCக்கு எதிரா சட்டம் இயற்றி விட்டாச்சாம். இறையில்லத்தை இடிப்பதை வீரமாக நினைக்கிறான்களே இவன்களை என்ன செய்ய

இலியாஸ்:: இறைவன் அநியாயக்காரர்களை பார்த்துக்கொள்வான்.நம்ம இயன்ற அளவு போராடியே தீர வேண்டும் (உதாரணம்)காக்கை அதன் கூடுகளை சீண்டித்தான் பாருங்களேன் முடிந்தவரை போராடும்.
வாங்க போய் அந்த நசுவினி ஆற்றுப்பாலம் வரை நடந்துவிட்டு வருவோமே

அஸ்லம்:: வாங்க மாப்ளே போயிட்டு வருவோமே……இன்று 26-2-2020 காலை6:45க்கு பேருந்து நிலைய டீக்கடையில் நண்பர்கள் பேசிக்கொண்டதை நமக்கென்ன என்று கடக்காமல் கேட்டபோது……

ஆக்கம்

அப்துல் ஜப்பார் துல்கர்ணைYour reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: