செய்வதறியாது தவித்த மூதாட்டிகளுக்கு கரம் கொடுத்த கலெக்டர்… குவியும் பாராட்டு !

1011 0


திருப்பூர் மாவட்டம் பூமலூர் கருப்பராயன் கோயில் பகுதியில் வசித்து வருபவர்கள் பழனிச்சாமி என்பவரின் மனைவி ரங்கம்மாள் மற்றும் காளிமுத்து என்பவரின் மனைவி ரங்கம்மாள் ஆகியோர். மூதாட்டிகளான இருவரும் வயது முதிர்வு காலத்தில் தங்களது பிள்ளைகளைச் சார்ந்து இருக்கக் கூடாது எனக் கருதி வருங்கால மருத்துவ செலவுக்காக சுமார் ரூ.46,000 அளவுக்குப் பணத்தைச் சேமித்து வைத்திருந்துள்ளனர்.

அண்மையில் பழனிச்சாமியின் மனைவி ரங்கம்மாள், காசநோய் பாதிப்பையொட்டி மருத்துவமனைச் சென்று சிகிச்சை எடுத்துள்ளார். அப்போது மருத்துவர்கள், `மேல்சிகிச்சைக்குப் பணம் தேவைப்படும்’ எனக் கூறவே, இவ்வளவு நாள் சேமித்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து தன் மகளிடம் கொடுத்துள்ளார்.

இதனால், ரங்கம்மாள் பாட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தத் தகவல் இன்னொரு ரங்கம்மாள் பாட்டிக்கும் தெரியவர, அவரது குடும்பத்தினரும் மூதாட்டி சேமித்து வைத்திருந்த செல்லாத நோட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். செல்லாத நோட்டுகளை வைத்துக் கொண்டு ரங்கம்மாள் பாட்டிகள் படும் துயரம் செய்தியாக வெளியானது. இதனைக் கவனித்த திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், அவ்விரு மூதாட்டிகளுக்கும் உதவ முன்வந்தார். ஏற்கெனவே இந்த இரு மூதாட்டிகளும் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்த தகவலையும் அறிந்து கொண்டார்.

அதன்படி இருவருக்கும் உடனடியாக முதியோர் உதவித்தொகையை வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். தொடர்ந்து, அவ்விரு பாட்டிகளையும் நேரில் வரவழைத்து அரசு ஆணையை இருவருக்கும் நேரில் வழங்கினார். மேலும், காசநோயால் அவதிப்பட்டுவந்த ரங்கம்மாள் பாட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி பெருந்துறை மருத்துவக்கல்லூரிக்குப் பரிந்துரையும் செய்தார்.

இவ்விரு உதவிகளோடு சேர்த்து, மூன்றாவதாக மூதாட்டிகள் வைத்திருந்த செல்லாத பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுத்துறை வங்கி ஒன்றின் மேலாளருக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார். மாவட்ட கலெக்டரின் மனிதநேயத்தைக் கண்டு அந்தப் பாட்டிகள் மனம் நெகிழ்ந்து வாழ்த்தியுள்ளனர்.

சிறுகச் சிறுக சேமித்த பணம் செல்லாத நோட்டுகளாக மாறிவிட்ட துயரத்தில் கலங்கி நின்ற மூதாட்டிகளுக்குக் கரம் கொடுத்து உதவிய மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: