உங்கள் பகுதியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றை உடனே மூடுங்கள் !

1308 0


குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த நிலையில், மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் நேற்று முன் தினம் மாலை 5.40 மணிக்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில், 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான். 29 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.

மாநில மீட்பு படையினர் மற்றும் தனியார் மீட்பு குழுவினர் முயன்று சிறுவனை மீட்க முடியாததால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பல்வேறு வழிகளில் முயன்று பார்த்தனர். ஆனால், சிறுவனை மீட்பதில் பின்னடைவே ஏற்பட்டது.

சிறுவன் தற்போது 100 அடிக்கும் கீழே இருக்கிறான். மேலும், கீழே சென்று விடாமல் தடுக்க அவன் கையில் கயிறு கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழி தோண்டும் பணி நடக்கிறது. தீயணைப்பு வீரர்களை உள்ளே இறக்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

புதிதாக துளையிடும் இடத்தில் அதிக பாறைகள் இருப்பதால், தாமதம் ஏற்படுகிறது. பாறை உடைப்பு கருவிகளை பயன்படுத்தி துளையிடப்பட்டு வருகிறது.

சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட தமிழகத்தின் பல இடங்களிலும் கோவில்கள், தர்காக்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. சமூக வலைதளங்களிலும் பலரும் சுர்ஜித் மீட்கப்பட்டால்தான் உண்மையான தீபாவளி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உங்கள் பகுதியில் மூடப்படாத அல்லது சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருக்குமானால், அதனை உடனே மூடவும் என்றும், இருட்டு அறைக்குள் மூச்சுத்திணறும் அவல நிலை எந்த குழந்தைக்கும் வேண்டாம் என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: