அதிரை சகோதரர்கள் என்னும் பெயரில் இயங்கி வரும் வாட்ஸ்அப் குழுமம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து தற்போது நான்காம் ஆண்டு துவக்கத்தில் உள்ளது.
இக்குழுமத்தின் சார்பாக பல்வேறு நலப் பணிகள் ஒன்றிணைக்கப்பட்டு சமூக சேவை ஆற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குழுமத்தின் நான்காம் ஆண்டு துவக்கத்தையொட்டி இன்று வெள்ளிக்கிழமை பெரிய ஜுமுஆ பள்ளி, கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி, தரகர் தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி, ஏ.ஜே. ஜுமுஆ பள்ளி மற்றும் TNTJ கிளை 1 ஆகிய ஜுமுஆக்களில் ஆதரவற்ற ஏழைகள் 80 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Your reaction